புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் தீவிரமாகப் பரவிவரும் 03 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்,நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள நெற் பயிர்களே இந்த புதிய வகையான கிருமி தொற்றினால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிருமித் தொற்று குறித்து விவசாயிகள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article