புங்குடுதீவு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புங்குடுதீவு மேற்கு பிட்டியம்பதி ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் திருக்கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா, எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி ஆலய மஹோற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெறவிருப்பதுடன், மஹோற்சவ காலத்தில் விசேட உற்சவம் தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 8 மணிக்கு பகல் உற்சவமும், மாலை 6 மணிக்கு இரவு உற்சவமும் ஆரம்பமாகி நடைபெறவிருப்பதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தேர்த் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவிருப்பதாக, ஆலயப் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

 

 

Share this Article