புங்குடுதீவு வெற்றிக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு அனைத்து விளையாட்டுக் கழகங்களின் ஒன்றியம் நடாத்தும் யாழ் மாவட்டத்தின் ஆறு அணிகள் கலந்துகொள்ளும் புங்குடுதீவு வெற்றிக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடர் இன்று (ஜூன் 21) ஆரம்பமாகியுள்ளது.

வலைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றும் புங்குடுதீவு மற்றும் புங்குடுதீவு ஐக்கிய அணிகளின் வீராங்கனைகளுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு, புங்குடுதீவு குறிச்சிகாட்டில் அமைந்துள்ள தீவக பொது மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபர் கே. வினோதன், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களான நிசாந்தன் , ஜவாஹர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சீருடைகளை வழங்கிவைத்தனர் .

Share this Article