புங்குடுதீவு மடத்துவெளி தொடக்கம் குறிகட்டுவான் வரையான வீதி திருத்த வேலைகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு மடத்துவெளி தொடக்கம் குறிகட்டுவான் வரையான பிரதான வீதி திருத்த வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் மோசமாக சேதமடைந்த நிலையில் இருந்து வந்த வீதி தற்போது திருத்தம் செய்யப்பட்டு வருகின்றமையால் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்வுடன் உள்ளனர்.

இதேவேளை வேலணை – புங்குடுதீவை இணைக்கும் பாலத்தினையும் விரைவில் திருத்தம் செய்யவேண்டும் என அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article