புங்குடுதீவுக் கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு தெற்குக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒரவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவைச் சேர்ந்த 27 வயதான அன்பழகராஜன் ஜாக்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை இருவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார். மற்றையவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காணாமல் போனவரின் உடல் இன்று கரையொதுங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article