புங்குடுதீவில் பவுசர் மூலம் கால்நடைகளுக்கு குடிதண்ணீர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவுப் பகுதியில் மக்களே குடிநீர் இல்லாது அல்லலுறும் இந்நாட்களில் அங்குள்ள கால்நடைகளும் நீரின்றி தவிப்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக தொட்டி அமைத்து அதற்கு பவுசர் மூலம் நீர் நிறைத்து கால்நடைககளின் நீர்த்தாகம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

கேரதீவு, ஊரதீவு, மடத்துவெளி மற்றும் குறிச்சுக்காடு போன்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக வேலணை, சாட்டி பகுதியிலிருந்து 4000 லீற்றர் தண்ணீர் பவுசர் மூலம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article