புங்குடுதீவில் பசுக்கன்றை வெட்டிய மூவர் மக்களால் மடக்கிப்பிடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதேசத்தில் திருட்டுத்தனமாக பசுக்கன்று ஒன்று வெட்டப்பட்ட நிலையில் நேற்று(ஜூலை 22) மாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக இங்கு தங்கியிருந்து மாட்டுத் திருட்டுக்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Share this Article