புங்குடுதீவில் இடம்பெற்ற சாரணர்களுக்கான ஆரம்ப பயிற்சி வகுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புங்குடுதீவு மத்திய கல்லூரி மற்றும் புங்குடுதீவு றோ. க.த. க. வித்தியாலயம் என்பவற்றில் இன்று (நவம்பர் 29) சாரணர்களுக்கான ஆரம்ப பயிற்சி வகுப்பு இடம்பெற்றது.

இந்தப் பயிற்சியினை சி.சிறிதரன் (உதவி மாவட்ட ஆணையாளர் ஊடகம் மற்றும் IT) அவர்களுடன் இணைந்து மாவட்ட சாரண ஆசிரியர் ந. மன்சுதன் , திரிசாரண சபைத் தலைவர் ஜே. ஜேஜீவன் , திரி சாரண சபை செயலாளர் க. பானுஜன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் ம.பிரதீபன் ( யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர்) அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும் யாழ் மாவட்ட சாரணர் கிளைச்சங்க செயலாளர் செ. தேவரஞ்சன் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்தப் பயிற்சி வகுப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article