பிளாஸ்ரிக் விசைப்படகில் சென்ற இருவரைக் காணவில்லை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு எஸ்.கே. கடலுணவு கொள்வனவு விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் இன்றைய தினம் (பெப்ரவரி 21) மதியம் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி பிளாஸ்ரிக் விசைப்படகில் சென்ற சமயம் இருவரும் காணமல் போயுள்ளனர்

மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து இருவரும் புறப்பட்டுள்ளனர் திரு.ரமேஸ் ஞானசிங்கம் (41 வயது) 03 பிள்ளைகளின் தந்தை ரஞ்சன் மேயன் (19வயது) ஆயினும் இவர்கள் இருவரும் தற்போது காணமல் போயுள்ளனர் இவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

இவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கிழக்கு தீர்த்தக்கரையை அண்மித்த கரையில் கரையொதுகங்கியுள்ளது எரிபொருள் தீர்ந்த நிலையில் எதுவித சேதாரங்களும் இன்றி இயந்திரமும் படகும் கரை சேர்ந்துள்ளது.

மதியம் 2 மணி முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக கடும் மழை காணப்பட்டது. காலநிலைகளில் ஏற்பட்ட மாறறங்கள் காரணமாக தவறி கடலில் வீழ்ந்திருக்க கூடும் கருதப்படுகின்றது. ஆயினும் இது வரை எந்த தகவலும் கிடைக்காமையினால் நெடுந்தீவு சோகநிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பாக தகவல் கிடைப்பின் 0768312063, 0771816052 போன்ற எமது இணையத்தள தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

TAGGED:
Share this Article