பிரிட்டன் கார் விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பிரிட்டனின் தென்கிழக்குப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் பகுதியில் இரு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத்தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளும் அடங்குகின்றனர். ஒரு காரில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மற்றைய காரில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றார்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளே உயிரிழந்துள்ளனர். மகன் காயமடைந்துள்ளார் என்பதை லண்டன் தமிழ் வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

Share this Article