பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய பாடசாலைகளில் இடைவகுப்பு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான முக்கியமான அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் ஏப்ரல் 21ஆம் திகதிவரையில் 2 தொடக்கம் 4 மற்றும் 7 முதல் 10 வரையான தரங்களுக்கு புதிய மாணவர்களைச் சேர்க்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் புதிய மாணவர் சேர்ப்புக்கான கடிதங்களைக் கல்வி அமைச்சு வழங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article