பள்ளத்தில் குடைசாய்ந்த பேருந்து!- மூவர் சம்பவ இடத்திலேயே பலி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்று திரும்பிய பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு(பெப்ரவரி 19) நோட்டன் பகுதியில் நடந்துள்ளது. குடைசாய்ந்த பஸ் 100 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் கினிக்கத்தேன, நாவலப்பட்டிய, வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நோட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article