பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அபராதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ரயிலில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(டிசம்பர் 30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளதாகவும் பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை 10,000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article