படகு சேவையில் நேர மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகைப் படகு கொரோனா அச்சம் மற்றும் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையால் தற்போது இன்று (ஜீலை 22) முதல் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது கடும் காற்று நிலமை காணப்படுவதால் காலையில் 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து 08.00 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும்

மாலை படகு சேவை நெடுந்தீவில் இருந்து 03.00 மணிக்கு குறிகட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் 04.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

காற்று அதிகமாக காணப்படுவதால் வடதாரகைக்கான பதில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா குறிப்பிட்ட நேரத்திற்கு தனது சேவையினை வழங்கும் என பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.எ.அருந்தவ சீலன் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

Share this Article