பக்திபூர்வமாக நடைபெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று(ஜூலை 2) ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடைபெற்றது.

அதிகாலை 4 மணியளவில் ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 8.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து அருட்காட்சி தந்தார்.

அம்பாளின் அருளை வேண்டி நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

Share this Article