நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நோயாளர் காவு வண்டி மோதி 9 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முகம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 23) இந்த விபத்து நடந்துள்ளது.

வீதியில் முச்சக்கர வண்டியில் பாண் வாங்கி விட்டு வீதியைக் கடந்து வீட்டுக்கு வர முயன்றபோதே சிறுவன் நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

நோயாளர் காவு வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பூநகரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article