யாழ் வாகீசனின் “அட்டாளைக் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் (ஆகஸ்ட்08) நெடுவூர்த் திருவிழா 2024 இன் இரவு நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
நெடுந்தீவு மேற்கைச் சேந்தவரும் வன்னிப் பெருநிலப்பரப்பில் வசிப்பவருமான சிவபாலசிங்கம் வாகீசன் அவர்களின் கவிதை நூல் தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கவிஞரின் மகனான வாகீசன் சாரங்கனின் நிகழ்ச்சித்தொகுப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அறிமுக உரையினை ஊரும் உறவும் நிறுவன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன் மேற்கொண்டார்.
அன்னை கடலுணவு நிறுவனத்தின் நெடுந்தீவு இணைப்பாளர் ரஜீன் நூலினை வெளியிட்டு வைக்க உலக சிறுவர் நலன் காப்பக இணைப்பாளர் து. சத்தியேந்திரா பெற்றுக்கொண்டார்.
நூலின் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். நூலின் மதிப்பீட்டுரையினை உலக சிறுவர் நலன் காப்பக இணைப்பாளர் து. சத்தியேந்திரா வழங்கியிருந்தார்.
தொடர்ந்து விருந்தினர்களுக்கும், நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்குமான சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது.