நெடுந்தீவை சார்ந்த ஒருவருக்கு கொரோனா?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட அனடியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு 11ம் வட்டாரத்தினை சார்ந்த நபர் ஒருவரரே அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் இன்றைய தினம் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற சமயம் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அயினும் இது தொடர்பான உத்தியோக அறிக்கைகள் இன்னும வேலணை சுகாதாரப் பணிமனை ஊடாக நெடுந்தீவு சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபர் இன்றைய தினம் காலையில் வடதாரகைப்படகு மூலம் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகம் வருகை தந்து பொதுப்போக்குவரத்து ஊடாகவே யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

 

Share this Article