அகில இலங்கை தமிழ் அழகுக்கலை, அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்தும் 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான “சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் ”
விருதுகள் விழா நாளை(மே 6) இடம்பெறவுள்ளது.
காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திருகோணமலை, உட்துறைமுக வீதியில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
விருதுவிழாவில் நெடுந்தீவைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்நகரில் வசிப்பவருமான தோமஸ்அமலதாஸ் வீர்ஜினி 2023 ஆம் ஆண்டுக்கான விருதினைப்பெறவுள்ளார்.
கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் BMICH இல் இடம்பெற்ற பட்டமளிப்பில் இவர் ஆரி வேலை வடிவமைப்பு மற்றும் தையற் கலைக்கான பட்டத்தைப் பெற்றதுடன் சிறந்த ஆரி வடிவமைப்பாளர் – 2023 விருதையும் பெற்றுள்ளார்.