நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உலக ஆசிரியர் தினம் -2024  நிகழ்வு நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் மிகச் சிறப்ப்பான முறையில் இன்றையதினம் (ஒக்.08) நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள்  மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின்  ஏற்பாட்டிலும், ஒழுங்கமைப்பிலும்  இடம்பெற்றது. விழா நாயகர்களான ஆசிரியர்கள்  மலர் மாலை அணிவித்து மாணவர்களால் விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து  ஆசிரியர்கள் ஆசிவழங்கி கெளரவிக்கப்பட்டு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றது.

ஆசிரியர்களது நலன் வேண்டி இன்று காலை புனித யுவானியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article