நெடுந்தீவு மேற்கு கிராமத்தில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத் திட்டம் அங்குரார்ப்பணம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை” அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் நேற்றையதினம் (16.03) நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவின் நெடுந்தீவு மேற்கு (J/01) கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில்   பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச சபை  உறுப்பினர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள், கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article