நெடுந்தீவு மேற்கில் இருந்து பிரதேச வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களது நலன் கருதி விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 14) முதல் இச்சேவை ஆரம்பமாகவுள்ளது. தினமும் காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு மேற்கில் இருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அலுவல்களை முடித்துக்கொண்டு காலைநேர படகுசேவைக்காக காலை 9.30 மணியளவில் ஈடுபடும் பேரூந்தில் மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியும்.
யாழ் சாலை முகாமையாளருடன் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.