நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21 ) முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினால் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளை தலைவர் எ. அருந்தவசீலன் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஏனைய 07 பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணப் பொதி அடுத்தவாரம் வழங்கப்படவுள்ளது.