யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Laparoscope இயந்திரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய Laparoscope இயந்திரம் நேற்று (ஏப்ரல் 22) கையளிக்கப்பட்டது.

சர்வதேச மருத்துவ நல அமைப்பின் IMHO (International Medical Health Organisation – USA) ஒருங்கிணைப்பில் திரு. ராஜ் ராஜரட்ணம் அவர்களின் 5 கோடி ரூபா நிதி அனுசரணையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலம் வயிற்றுப் பகுதியில் இலகுவாக பல குழாய் மூல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். இதனால் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும்.

சத்திர சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்படாது. மற்றும் வயிற்றின் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதியில் இரத்த இழப்பு மிகக் குறைவாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட நோயாளி மேற்படி சிகிச்சை பின்னர் மிக விரைவாக குணமடைந்து விடுவார். சத்திர சிகிச்சை நிபுணர்கள் நுட்பமாக இந்த சிகிச்சையை செய்வதனால் நோயாளிகளுக்கு மிகவும் சரியான முறையிலான சிகிச்சை பலன் கிடைக்கும்.

IMHO நிறுவனம் அண்மைய காலங்களில் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article