நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை கடந்து பயணித்து வரும் வேளையில் கனடா அமைப்பில் சில நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு பின்வரும் அறிவித்தலினை வழங்கியுள்ளார்கள்
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினது அலுவல முகநூல் செயலாளரினாலும் வட்சப் செயலி தலைவரினாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது ஆயினும் இவ்விரு சமுக ஊடாகத்தினையும் ஆயுள் அங்கத்தவர்கள் பயன்படுத்துவதன ஊடாக ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதனைக் கருத்திற் கொண்டு ஆயுள் அங்கத்தவர்களால் விடுக்கப்பட்ட அறிவித்தலினை ஏற்று செயலாளர் அவர்கள் முகநூலினை கையாள்வதற்கான சம்மதத்தினை தெரிவித்துள்ளார்
தலைவரும் மிக விரைவில் வட்சப் குறுப்பினையும் ஆயுள் அங்கத்தவர்கள் கையாள்வதற்கான அனுமதியினை வழங்குவார் என பூரணமாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளானர்
மேலும் இன்றிலிருந்து (டிசம்பர் 01) கனடா மக்கள் ஒன்றியத்தின் அலுவலக முகநூல் ஊடாக வெளியீடு செய்யப்படும் பதிவுகள் எல்லாம் ஆயுள் அங்கத்தவர்கள் சார்ந்த பிரதிநிதிகள் ஊடாகவே கையாளப்படும் என்பதை ஆயுள் அங்கத்தவர்கள் கனடா வாழ் நெடுந்தீவு சொந்தங்கள் மற்றும் நெடுந்தீவு நெடுந்தீவு உறவுகள் அனைவருக்கும் தெரிவித்து நிற்கின்றார்கள்
திரு.ஐ.சண்முகநாதன், திரு.ஆ.விநாயகமூர்த்தி, திரு.கோவிந்தசாமி, திரு.பி.நவாரசன் திரு.பா.நாதன், திரு.லோ.நவநாதன், திரு.ச.தேவானந் ஆகியோர் ஆயுள் அங்கத்துவ பிரதிநிதிகளாக செயலாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.