நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பின் முழுமையான வடிவம். படியுங்கள் பகிருங்கள்…….

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் பாடசாலையின் 80வது ஆண்டு விழாவினை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ம் திகதி சிறப்புடன் மேற்கொள்ளவும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

செயற்பாடுகளை விஸ்தரிக்க பழைய மாணவர் சங்கத்தினை பலப்படுத்தவும் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் எமது பாடசாலையில் கல்வி கற்ற அனைவரும் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும்.

அங்கத்துவ விண்ணப்பப படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து அங்கத்துவ கட்டணமாக ரூபாய் 200.00 செலுத்துவதன் ஊடாக அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும். அத்துடன் மாதந்த சந்த 100.00 ரூபாய் வீதம்வருடம் 1200.00 செலுத்தப்படல் வேண்டும்

ஆயூட்கால அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் ரூபாய்10,000.00 இனை செலுத்தி ஆயுட்கால அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளமுடியும்.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை மாலை 03.30 மணி தொடக்கம் மாலை 05.30 மணி வரை பாடசாலையில் நேரடியாக விண்ணப்ப படிவத்தினைப்பெற்று பூரணப்படுத்தி வழங்க முடியும்.

நெடுந்தீவிற்கு வெளியில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google form ஊடாக விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து இணைந்து கொள்ள முடியும்

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் அனைவரும், குறிப்பிட்ட தொகையை வங்கியில் வைப்பு செய்து, அந்த வைப்பு பற்றுச் சீட்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழ்கண்ட Google இணைப்பை பயன்படுத்தலாம்:
👉 Google Form Link

Account Details:-

Account Number  – 92535196

Bank – Bank of Ceylon – Delft Branch

Account Name – Delft Mahavidiyalayam Old Student Union

பற்றுச்சீட்டு அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம்  94774837567

Share this Article