நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 80வது ஆண்டு விழா 2025 ஜனவரி 17 இல் இடம்பெறவுள்ள நிலையில் 80வது ஆண்டு விழா மலர் வெளியீடு செய்வதற்கானஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
இவ் நூலிற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றது.
• நெடுந்தீவு மகாவித்தியாலயம் சார்ந்ததாகவும் நெடுந்தீவினை பற்றியதுமானஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்கள்வரவேற்கப்படுகின்றன.
• ஆக்கங்கள் யாவும் தங்களது சுய முயற்சியினால் எழுதுப்பட்டதாக அமைதல்வேண்டும்
• இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் ஆக்கங்களைஅனுப்பி வைக்க முடியும்.
• ஆக்கங்கள் யாவும் அதிபர், நெடுந்தீவு மகாவித்தியாலயம் எனும் முகவரிக்குபதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் 80வது ஆண்டு நூலிற்கான ஆக்கம் எனக்குறிப்பிடுதல் வேண்டும்.
• ஆக்கங்கள் யாவும் யூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக (2025.06.30) கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
• கிடைக்கப்பெறும் ஆக்கங்கள் யாவும் நூல் வெளியீட்டுக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட்டு தரமானதாக கருதப்படும் ஆக்கங்களே தேர்வு செய்து பிரசுரிக்கப்படும்.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள
திரு.செ.மகேஸ் – 94774687873 தலைவர் 80வது ஆண்டு நூல் வெளியீட்டுக்குழு
திரு.ஜ.தயாபரன் – 94774269166 பாடசாலை முதல்வர் தலைவர் பழையமாணவர் சங்கம்
திரு.கு.ஜனேந்திரன் – 94770251033 செயலாளர் பழைய மாணவர் சங்கம்