நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்மாதிரி செயற்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவின் தெற்குப் பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரச காணிகளில் நேற்றையதினம் (ஜனவரி28) பனம்விதைகள் நாட்டும்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

நீண்ட காலபயனை கருத்தில் கொண்டு வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் அவர்களது தலைமையில்  ஆசிரியர்கள் பாடசாலை சாரணர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பெருமளவு பனம்விதைகள் நாட்டப்பட்டன.

குறித்த செயற்திட்டத்திற்காக தீவின் தென்பகுதியில் அமைந்துள்ளஅரசகாணிகள் மற்றும் கடற்கரைப்பிரதேசங்கள் நெடுந்தீவு  பிரதேச செயலரால் நேரடியாக அடையாளப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் குறித்த முன்மாதிரியான  செயற்பாடுதொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article