நெடுந்தீவு புனித யூதாததேயு ஆலய பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை (21/03) இடம்பெறவுள்ளது.
பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் எதிர்வரும் வியாழன் (19.03) மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையும் புனிதரின் கொடியேற்றமும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறும்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை (20.03) மாலை 04:30 மணிக்கு திருச்சிலுவை பாதை தியானமும் தொடர்ந்து நற்கருணை பெருவிழா திருப்பலியும் இடம்பெறவுள்ளது.
சனிக்கிழமை (21/03) காலை 06:30 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் ,ஆசீர்வாதமும் இடம்பெறும்.
பக்தர்களின் நலன்கருதி எதிர்வரும் வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் திருஇருதய ஆண்டவர் ஆலயம் மற்றும் வியாகுல அன்னை கெபியிலிருந்தும் மாலை 03:30 மணிக்கு இருவேறு பேரூந்துகள் சமநேரத்தில் புறப்படும்.
திருவிழா அன்று மேற்குறித்த இடங்களிலிருந்து காலை 05:30 மணிக்கும் பேரூந்துகள் புறப்படும். இப்பயணங்களுக்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.