நெடுந்தீவு பிரதேச செயலாளரும் உத்தியோகத்தர்களும் முறைப்பாடுகள் அற்றநிலையில் கடமையில் – பாராட்டினார் அரசாங்க அதிபர்

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில்அண்மையில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பதிவு தொடர்பாக நெடுந்தீவுபிரதேச செயலகத்தில்  கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்டஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (ஓகஸ்ட் 21) சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன் போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில்  கடமையாற்றும்உத்தியோகத்தர்கள்  அரசாங்க அதிபரிடம்  தெரிவிக்கையில்,

கடல்பிரயாணம் மூலம் நெடுந்தீவு சென்று கடமையாற்றும் அனைத்துத் தரஉத்தியோகத்தர்களையும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமேகடமையாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது மிகுந்த மனவேதனைக்குரிய வியடமாகும் எனவும், தாம் விரக்தி நிலையில் இருப்பதாகவும், அச்செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் உத்தியோகத்தர்கள்தெரிவித்தார்கள்.

மேலும், பிரதேச செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற பொழுதிலும்கடமைக்கு ஒழுங்காக  சமூகமளிப்பதுடன் அவசர நிலமைகளின் போதுநெடுந்தீவிலேயே தங்கி நின்று பணியாற்றுபவர் எனவும் தெரிவித்தனர்.

மேலும்,  பொதுவாக தண்டனையின் பேரிலேயே நெடுந்தீவிற்கானஇடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான கருத்து உள்ளமையும் மிகவும்வேதனைக்குரிய விடயம் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டுஉண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கஅதிபரை நேரடியாக  கோரியதுடன், கோரிக்கை மனுவினையும்கையளித்தார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் ..

சமூக வலைத்தளங்களில் வரும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பானசெய்திகளை  பெரிது படுத்ததேவையில்லை எனவும், குறித்த பதிவு தொடர்பில்உத்தியோகத்தர்கள் மன உளைச்சலடைய வேண்டிய அவசியமில்லை என்றும்உத்தியோகத்தர்கள் எவ்வளவு சிரமப்பட்டு நெடுந்தீவிற்கு சென்றுகடமையாற்றுகின்றாா்கள் என்பது எமக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நன்குதெரிந்த விடயம் என தெரிவித்தாா்.

மேலும், தற்போது கடமையாற்றும் பிரதேச செயலாளர் பதவியுயர்வுகிடைக்கப்பெற்றுள்ள போதிலும்  எனது கோரிக்கையின் அடிப்படையிலேயே    புதிய பிரதேச செயலாளர்  கடமையை பொறுப்பேற்கும் வரையில் தொடர்ந்து  கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அற்றநிலையில்அனைத்து  கடமைகளையும் பிரதேச செயலாளரும் ஏனையஉத்தியோகத்தர்களும் இணைந்து எவ்வித முறைப்பாடுகளும் அற்ற நிலையில்கடமையாற்றுவதற்கு தனது பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தாா்.

மேலும், நெடுந்தீவு வாழ் மக்களின் நிலைமையினை கருத்திற்கொண்டுஉத்தியோகத்தர்களை அங்கு நியமிக்கும் போது வேறு பிரதேசசெயலகங்களிலிருந்து கடமைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பெரும்சிரமங்களிற்கு உள்ளாவது அனைவரும் அறிந்த விடயம் என்றும், வழமையாககாலை 8.00 மணிக்குப் புறப்பட்ட படகு சேவை அவ் உத்தயோகத்தர்கள் உரியநேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கு ஏதுவாக  கடந்த 2025.08.11ம் திகதிமுதல் காலை 7:30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படுவதாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும்அசௌகரியங்கள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்தஅரசாங்க அதிபர் அவர்கள்,  நெடுந்தீவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்நோக்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஏனைய சிரேஷ்ட தர உத்தியோகத்தர்கள்நியமிக்கப்படாத சந்தர்ப்பத்திலும் பிரதேச செயலாளருடன் இணைந்துகடமையாற்றும் உத்தியோகத்தர்களது சேவை அளப்பரியது எனவும் சமூகவலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதனைவிடுத்து ஆக்கபூர்வமான ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும்வெளியிடுவதே ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் எனவும்தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்உத்தியோகத்தர்கள் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்  கே.சிவகரன் மற்றும்மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article