நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருட நிறைவை  முன்னிட்டு  நெடுந்தீவு பிரதேச  செயலக பிரிவில் சமுர்த்தி திட்டத்தின் மூலம்வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகள் J/04, J/ 05 ஆகிய கிராம அலுவலர்பிரிவுகளில் நேற்றையதினம் (ஜூன் 29) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்  ரஞ்சித் டிசில்வா, யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் F.C. சத்தியசோதி , பிரதிப்பணிப்பாளர்  உபாலி புஸ்பகுமார , நெடுந்தீவு  பிரதேச செயலாளர்நிவேதிகா கேதிசன் ,  சமுர்த்தி திணைக்கள பிரதான  தலைமை முகாமையாளர்வீரக்கோன் மற்றும் யாழ் மாவட்ட கண்காணிப்பு முகாமையாளர் பாலகரன்,யாழ்மாவட்ட திட்ட முகாமையாளர் சிவகுமார், நெடுந்தீவு  சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் ,கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.

இதேவேளை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடநிறைவை  முன்னிட்டு  நெடுந்தீவு பிரதேச  செயலக சமுர்த்தி  பிரிவின் ஏற்பாட்டில் ஜே/05 கிராம  அலுவலர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளினால்சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

Share this Article