நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி வீட்டுத்திட்ட வீடு கையளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரண்விமன வீட்டுத்திட்டம் -2023 இன்கீழ் அமைக்கப்பட்ட வீடு தேற்றையதினம் (ஒக். 30) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு  பயனாளியிடம்   கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு ஜே/05 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கே இத்திட்டம் வழங்கப்பட்டது.

 கையளிப்பு நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நிவேதிதா கேதீசன் அவர்கள் கலந்துகொண்டு  சிறப்பித்தார் .

அத்துடன் நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செல்வி. நகுலராணி, மகாசங்க முகாமையாளர், வலய முகாமையாளர், சமுர்த்தி சமுக அபிவிருத்திஉதவியாளர்,ஜே/05 பிரிவு கிராம அலுவலர், மற்றும் பொதுமக்கள் என பலர்கலந்துகொண்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது

Share this Article