நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளூராட்சி தின விழாவில் புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த , 2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று தீவுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளூராட்சி தின பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த. க. வித்தியாலயத்தின் மாணவன் யோகச்சந்திரன் அக்‌ஷிகன் (புள்ளி170)

நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் மாணவர்கள் நவரத்தினசிங்கம் வஸ்மிகன் (புள்ளி 147) கேதீஸ்வரன் சரண்ஷிகா (புள்ளி 133)

ஆகியோர் பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து நினைவுப் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை குறித்த இரு பாடசாலைகளிலும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று வெட்டுப்புள்ளியைத் தாண்டாத மாணவர்களும் கௌரவிப்கப்பட்டமை சிறப்பாகும்.

Share this Article