நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிட 06 கட்சிகள் தேர்வாகியுள்ளது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் 2025 இல் போட்டியிடுவதற்கு 07 கட்சிகள் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த போதும் 06 கட்சிகளின் வேட்பு மனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

01. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

02. இலங்கை தமிழ் அரசுக் கட்சி

03. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

04. ஐக்கிய தேசியக் கட்சி

05. ஐக்கிய மக்கள் சக்தி

06. தேசிய மக்கள் சக்தி

07. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

ஆகிய 07 கட்சிகள் நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிட நியமன பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் , அவை தொடர்பிலான பரிசீலணையின் போது “ ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி” இன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக யாழ் தெரிவத்தாட்சி அலுவலர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிட 06 கட்சிகள் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article