நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் நெடுந்தீவு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த வியாழக்கிழமை (02/04)யாழ் இந்திய உயர் ஸ்தானிகர் சாய் முரளி அவர்களை அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்

இதன்போது நெடுந்தீவு தொடர்பாக பலதரப்பட்ட விடயங்களை பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பின்வரும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் எழுத்தாவணமும் யாழ் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.
நெடுந்தீவில் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எதிர் கொள்ளும் கடற்போக்குவரத்து பிரச்சினை.
நெடுந்தீவு கடற்றொழில் தொடர்பாக வாழ்நாள் போராட்டமாக மாறிய இந்திய இழுவைப்படகு பிரச்சனை
கடந்த காலங்களிலும் தற்போதைய காலங்களிலும் ஏற்படும் கடற்றொழில் தொடர்பான இழுவைமடிப் பிரச்சனையால் ஏற்பட்ட நட்டங்களுக்கான இழப்புக்கள் பற்றியது.
நெடுந்தீவில் விவசாயம் மற்றும் ஆயுள்வேத மூலிகைகளுக்கான அபிவிருத்தி
நெடுந்தீவில் தற்போதுள்ள இளையோருக்கான தொழில் முயற்சிகளை இனங்கானலும் ஊக்குவிப்பும் அபிவிருத்தியும்
இதேவேளை அடுத்த கட்ட உயர்மட்ட சந்திப்புக்களின் போது எதிர்காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை நெடுந்தீவில் ஏற்படுத்த நல்லதொரு வாய்ப்பாக இச்சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நெடுந்தீவு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.