நெடுந்தீவு பிரதான வீதி சிரமதானம் – மாவிலி முதல் வைத்தியசாலை வரை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க முதல் வேலைத்திட்டமாக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதான வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் செயற்திட்டம் நாளை (ஜூலை 18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை (ஜூலை 18) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச வைத்தியசாலை வரை முதற்கட்டமாக இடம்பெறவுள்ளது.

இதன்போது நெடுந்தீவில் உள்ள சமூகமட்ட அமைப்புகள் , பொது நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கமாறு நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற பிரதேச சபையின் கன்னி அமர்வில் இவ் விடயம் தீர்மானிக்கப்பட்டதுடன் அதனை நாளை முதல் தொடர்ச்சியாக நெடுந்தீவு மேற்கு வரை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article