நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க முதல் வேலைத்திட்டமாக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதான வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நாளை (ஓகஸ்ட் 01) ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பல. நோ. கூ. சங்கம் அருகே சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச வைத்தியசாலை வரை இடம்பெறவுள்ளது.
இதன்போது நெடுந்தீவில் உள்ள சமூகமட்ட அமைப்புகள் , பொது நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கமாறு நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.