நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட இரு உயர்தரப் பாடசாலைகளில் வாணி விழா – 2025 நிகழ்வுகள் அண்மையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வாணி விழா வித்தியாலயமுதல்வரின் தலைமையில் நடைபெற்றது. இதன் பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேச சபையின் ஓய்வுநிலை செயலாளர் சோமலிங்கம் தம்பிராசா அவர்கள்கலந்து சிறப்பித்தார். இதன்போது மாணவர்களது கலைநிகழ்வுகள், சிறப்புரைகள் என்பன சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் வாணிவிழா நிகழ்வு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கலை நிகழ்வுகளுடன் நேர்த்தியாக இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர், நெடுந்தீவு பிரதேச கலாச்சார அலுவலர், அருட் தந்தையர்கள் என விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
