நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அறிமுகக் கூட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அறிமுகக் கூட்டம் நாளை (மே 07) மாலை 3.00 மணிக்கு கொடிவேல் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம், கொழும்பிலிருந்து வருகை தரும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிறுவனம் மூலம் ஆரம்பிக்கவுள்ள கல்வி நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி நெறிகள், வாழ்வாதார உதவித் திட்டங்கள், சமூக சேவைகள், கல்வி உதவித் திட்டங்கள், விளையாட்டு பயிற்சிகள், சிங்களம், ஆங்கிலம், கணினி, தையல், அழகுக்கலை, நடனம் உள்ளிட்ட வகுப்புகளின் கால அளவு, நடைபெறும் காலக்கட்டங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்படும்.

மேலும், நலன் பெறுவோரின் தேவைகள், அவசியமான பயிற்சிகள், வகுப்புகள், உதவித் திட்டங்கள், விருப்பங்களும் கருத்துகளும் இந்த சந்திப்பில் பகிர்ந்துகொள்ளலாம்.

அதிக நேரம் இல்லாததால், இக் கூட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் தேவையுடையோர் அனைவரும் சரியான நேரத்தில் வருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Share this Article