நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலக ஆசிரியர் தினம் -2024 நிகழ்வு நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டிலும், ஒழுங்கமைப்பிலும்  மிகச் சிறப்பாக இன்றையதினம் (ஒக். 07)  நடைபெற்றது.

நிகழ்வின் விருந்தினர்களாக வித்தியாலய முன்னாள்  அதிபர் அ. பீலிக்ஸ்ஜேக்கப், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் பிள்ளைநாயகம் நாவரசன், நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடா சார்பாக ஆசிரியர் ந. கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் மற்றும் விழா நாயகர்களான ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து மாணவர்களால் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து விருந்தினர்களால் ஆசிரியர்கள் ஆசிவழங்கி கெளரவிக்கப்பட்டு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகள்,  ஆசிரியர் நிகழ்வு மற்றும் நினைவு மரம் நடுகையும் இடம்பெற்றது.

நிகழ்வுக்கான ஆசிரியர் கௌரவிப்பு நினைவுச் சின்னங்களை நெடுந்தீவு மக்கள்ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் பி. நாவரசன் அவர்களும் பரிசில்களை நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடா அமைப்பினரும் , நினைவு மரநடுகைக்கான மரங்களை நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரும் வழங்கியிருந்தமை குறிப்பிடததக்கதாகும்

Share this Article