நெடுந்தீவு செபநாயகபுரத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளைஒன்றிணைத்து  04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நடைபெறஇருக்கும் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் கடந்தசெபநாயகபுரத்தில் இடம்பெற்றது.

குழந்தை யேசு கடற்தொழில் சங்கம், குழந்தை யேசு சனசமூக நிலையம்என்பவற்றின் அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்இவற்றின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஆவணி மாதம் இடம்பெறவிருக்கும் நெடுவூர்த்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த திருவிழாவை சிறப்பாக நடாத்திமுடிப்பது தொடர்பாகவும் இதில் சங்கம் சனசமூக நிலையம் என்பவற்றின்பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Share this Article