நெடுந்தீவு சென் ஜோன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு நிரந்தர மைதானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சென் ஜோன்ஸ் விளையாட்டு கழகத்திற்கான மைதானம் ஒன்றினை அமைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

நெடுந்தீவு 08 வட்டாரப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை நன்கொடையாகப் பெற்றுள்ளதுடன் , ஒன்றாக்கி அதனை துப்பரவு செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்றுவருகின்றது.

நெடுந்தீவு சென் ஜோன்ஸ் அறக்கட்டளை மற்றும் சென் ஜோன்ஸ் விளையாட்டுகழக நிர்வாகமும் இணைந்து, நெடுந்தீவு சென் ஜோன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு நன்கொடையாளர்களின் ஆதரவில் நிரந்தர மைதானம் அமைக்கும்பணி ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article