நெடுந்தீவு கோட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள்-தீவக வலய போட்டிக்கு தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே கடந்த வாரம்  இடம்பெற்ற துரித கணிதப் போட்டி மற்றும் சிறுவர் சித்திரம் வரைதல் போட்டி என்பவற்றில் வெற்றி பெற்று தீவக வலயமட்டப் போட்டிக்கு பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்  

கோட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டோரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றோர் எதிர்வரும் புதன்கிழமை (ஒக். 09) காலை 9.00 மணிக்கு ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ. க. வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள தீவக வலயமட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை  தீவக வலய போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவேருக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article