நெடுந்தீவு குழந்தையேசு முன்பள்ளி , திரு இருதய முன்பள்ளி என்பன இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 01 புதன்கிழமை சிறுவர் தினத்தன்று நெடுந்தீவு சவேரியார்ஆலய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக சிறுவர் முன் பிள்ளை பருவ அலுவலர் திருமதி டானியல் நிசாந்தினி கலந்து சிறப்பித்திருந்தார்.

விழா நாயகர்களான சிறார்கள் மற்றும் விருந்தினர்கள் மலர் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்தொழில் சமாச தலைவர், பிரதேச்சபை உறுப்பினர்கள், முன்பள்ளிகளின் இணைப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.