நெடுந்தீவு கிழக்கு பகுதியில் கந்தன் கருணை கல்வி நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் கந்தன் கருணை கல்வி நிலையம் நேற்று முன்தினம்( 15பெப்ரவரி ) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு பகுதியில் ஏற்கனவே கந்தன் கருணை முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புறமாக கல்வி நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம்( 15பெப்ரவரி ) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கல்வி நிலையத்தின் ஊடாக தரம் 9, 10, 11 மாணவர்களுக்கு முக்கிய பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றினை நிகழ்நிலை (zoom) செயலி மூலம் வெளியிடங்களில் உள்ள பிரபல ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கான யோகாசன வகுப்புகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article