நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 13 நாளை (ஏப்ரல் 12)

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நாளையதினம் (மார்ச் 12) வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையஇரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராகஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல்மற்றும் தனிநபர் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் மற்றும் ஆக்கத்திறன் செயற்பாடு என்பன நிகழ்வின் அமர்வு – 13 இல் இடம்பெறவுள்ளது.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும்  நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article