நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்தானமஹோற்சவம் 2025 இன்றையதினம் செவ்வாய்கிழமை (செப். 02) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

பக்தர்களின் அரோகரா ஓசையுடன் பக்திபூர்வமாக இன்று மதியம் முருகப்பொருமானின் திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.
இதேவேளை செப். 10 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை (செப்.11) பகல் 11.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், மாலை 5.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் தொடரந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.