2023ஆம் ஆண்டுக்கான நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான சிறப்புக் கலந்துரையாடல் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் (Thanthai Chelva Auditorium – No- 114, Rajendra Prasad Road, Jaffna) நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கலந்துரையாடல் அரியாலை, ஆறுதல் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கத்தவர்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் வகையில் யாழ் நகரை அண்டிய இடத்திற்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நெடுந்தீவு ஊரும், உறவும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ள முக்கியமான விடயங்கள்-
1. நிறுவனமயமாக்கலின் உறுதித்தன்மை முன்னெடுத்தல்.
2. நெடுந்தீவின் அபிவிருத்தியின் முன்னெடுப்பும், திட்டமிடலும்
3. 5 ஆண்டுத் திட்டமிடல் ஒன்றுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
4. நெடுந்தீவுக்கு வெளியே சர்வதேச, தேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடான வேலைத் திட்டங்கள்
5. கோரிக்கைகள், அவற்றின் முன்னெடுப்புக்கான வழிகாட்டல்
6. மாவட்டச் செயலகத்தில் பதிவிடல் மற்றும் வேறு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று எமது பகுதிக்கு வழங்குதல்
7. பாடசாலை அபிவிருத்திக்கான அரச கட்டமைக்கப்பட்ட செயற்றிட்டங்களை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
8. வேறு விடயங்கள்.
தொடர்புக்கு.
0741612446