தங்க கடன் அடகு சேவை தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தங்க கடன் அடகு சேவைக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.

இதற்கமைய அரச வங்கிகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளும் தங்க கடன் அடகு சேவைக்கு உச்சபட்சமாக 18 வீத வட்டியையே அறவிட முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடன் அட்டைக்கு 28 வீதத்தையும், தற்காலிக மேலதிக பற்றுக்கு 23 வீதத்தையும் உச்சபட்ச வட்டியாக அறவிட முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று(ஓகஸ்ட் 23) மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதத்தை 11 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this Article