யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2025 நேற்று (ஒக். 03) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது “இளங்கலைஞர் விருது“ வழங்கலில் சிறுகதை இலக்கியம்சார்பான விருதினை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த யேசுதாசன் கிறித்துராஜா அவர்கள் பெற்று எமது தீவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை இவ்விழாவில் “யாழ் முத்து” விருதினை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த அந்தோனிபிள்ளை அமிர்தநாயகம் அவர்கள் நாட்டுக்கூத்து துறைக்காக பெற்று பெருமை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.